/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'ஏ' பவுலர்கள் ஏமாற்றம் * சதம் விளாசினார் கான்ஸ்டாஸ்
/
இந்தியா 'ஏ' பவுலர்கள் ஏமாற்றம் * சதம் விளாசினார் கான்ஸ்டாஸ்
இந்தியா 'ஏ' பவுலர்கள் ஏமாற்றம் * சதம் விளாசினார் கான்ஸ்டாஸ்
இந்தியா 'ஏ' பவுலர்கள் ஏமாற்றம் * சதம் விளாசினார் கான்ஸ்டாஸ்
ADDED : செப் 16, 2025 10:31 PM

லக்னோ: லக்னோ போட்டியில் இந்திய 'ஏ' பவுலர்கள் ஏமாற்ற, ஆஸ்திரேலிய 'ஏ' வீரர் கான்ஸ்டாஸ் சதம் விளாசினார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா நான்கு நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று லக்னோவில் துவங்கியது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணி கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
சூப்பர் துவக்கம்
ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு கான்ஸ்டாஸ், கேம்ப்பெல் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். கான்ஸ்டாஸ் சதம் அடித்தார். இவர்களை பிரிக்க முடியாமல் தவித்தார் இந்திய 'ஏ' அணி கேப்டன் ஷ்ரேயஸ். முதல் விக்கெட்டுக்கு 37.1 ஓவரில் 198 ரன் சேர்த்த போது, கேம்ப்பெல் (88) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் ஹர்ஷ் துபே பந்தில் கான்ஸ்டாஸ் (109) அவுட்டானார்.
தொடர்ந்து அசத்திய துபே, மெக்ஸ்வீனியை, ஒரு ரன்னில் வெளியேற்றினார். கலீல் அகமது 'வேகத்தில்' ஆலிவர் (2) வீழ்ந்தார். பின் இணைந்த கூப்பர் கன்னோலி, லியாம் ஸ்காட் ஜோடி ரன் மழை பொழிந்தது. 5வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த போது, துபே பந்தில் கன்னோலி (70) அவுட்டானார்.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 337/5 ரன் எடுத்திருந்தது. லியாம் ஸ்காட் (47), ஜோஷ் பிலிப் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'ஏ' சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே 3 விக்கெட் சாய்த்தார்.