/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மத்திய மண்டலம் அபாரம்: துலீப் டிராபி பைனலில்
/
மத்திய மண்டலம் அபாரம்: துலீப் டிராபி பைனலில்
ADDED : செப் 11, 2025 09:22 PM

பெங்களூரு: துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னுக்கு சுருண்டது.
பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் தெற்கு, மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற மத்திய மண்டல அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
தெற்கு மண்டல அணிக்கு மோகித் காலே (9), ஸ்மரன் (1), கேப்டன் முகமது அசாருதீன் (4), குர்ஜப்னீத் சிங் (2) ஏமாற்றினர். தன்மே அகர்வால் (31), சல்மான் நிசார் (24), அங்கித் சர்மா (20) ஆறுதல் தந்தனர். தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மத்திய மண்டலம் சார்பில் 'சுழலில்' அசத்திய சரண்ஷ் ஜெயின் 5, குமார் கார்த்திகேயா 4 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய மத்திய மண்டல அணிக்கு டேனிஷ் மலேவார், அக்சய் வாட்கர் ஜோடி நம்பிக்கை தந்தது. ஆட்டநேர முடிவில் மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 50/0 ரன் எடுத்திருந்தது. டேனிஷ் (28), அக்சய் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.