/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஷஸ் டெஸ்ட்: அட்கின்சன் விலகல்
/
ஆஷஸ் டெஸ்ட்: அட்கின்சன் விலகல்
ADDED : டிச 29, 2025 10:59 PM

சிட்னி: ஆஷஸ் 5வது டெஸ்டில் இருந்து இங்கிலாந்தின் அட்கின்சன் காயத்தால் விலகினார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது டெஸ்ட், வரும் ஜன. 4ல் சிட்னியில் துவங்குகிறது.
இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் 27, விலகினார். நான்காவது டெஸ்டின், 2ம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன் இடது காலின் பின்பகுதியில் வலி ஏற்பட்டது. 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில் காயம் உறுதியானது. இதனையடுத்து சிட்னி டெஸ்டில் இருந்து அட்கின்சன் விலகினார். இவருக்கு பதிலாக, மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் மேத்யூ பாட்ஸ் 27, அணியில் இணைய உள்ளார். இவர், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் ஆகியோருடன் இணைந்து பவுலிங் செய்வார்.
ஏற்கனவே, அனுபவ வேகப்பந்துவீச்சாளர்ளான மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தால் விலகினர். தற்போது அட்கின்சனும் வெளியேறியது இங்கிலாந்து அணிக்கு பின்டைவாக அமையலாம்.
ஆடுகளம் சரியில்லை
மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்ட், 2 நாளில் (டிச. 26-27) முடிந்தது. முதல் நாளில் 20, 2ம் நாளில் 16 விக்கெட் சரிந்தன. ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இதனால் மெல்போர்ன் ஆடுகளம் குறித்து விமர்சனம் எழுந்தன. 'மேட்ச் ரெப்ரி' ஜெப் குரோவ், 'ஆடுகளம் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது' என, ஐ.சி.சி.,க்கு அறிக்கை தந்தார். இதனையடுத்து மெல்போர்ன் ஆடுகளம் திருப்தியற்றது என மதிப்பிடப்பட்டு, ஒரு தகுதி இழப்பு புள்ளி ஐ.சி.சி., வழங்கியது.

