/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சீன பாட்மின்டன்: சிந்து வெற்றி
/
சீன பாட்மின்டன்: சிந்து வெற்றி
ADDED : செப் 16, 2025 10:42 PM

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து வெற்றி பெற்றார்.
சீனாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, டென்மார்க்கின் ஜூலி ஜேக்கப்சன் மோதினர். மொத்தம் 27 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய சிந்து 21-5, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். சமீபத்தில் முடிந்த ஹாங்காங் ஓபனில் ஏமாற்றிய சிந்து, முதல் சுற்றோடு வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உலகின் 'நம்பர்-5' சீனதைபேயின் சோ டியன் சென் மோதினர். ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஆயுஷ் 19-21, 21-12, 16-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருத்விகா, ரோகன் கபூர் ஜோடி 17-21, 11-21 என ஜப்பானின் யூச்சி ஷிமோகாமி, சயாகா ஹோபாரா ஜோடியிடம் தோல்வியடைந்தது.