/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சீன பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து
/
சீன பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து
ADDED : செப் 18, 2025 03:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.
சீனாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவோங் மோதினர். மொத்தம் 41 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சீனதைபேயின் சியு ஹசியாங் சியே, சி-லின் வாங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.