/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சாத்விக்-சிராக் ஜோடி ஜோர்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்
/
சாத்விக்-சிராக் ஜோடி ஜோர்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்
சாத்விக்-சிராக் ஜோடி ஜோர்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்
சாத்விக்-சிராக் ஜோடி ஜோர்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டனில்
ADDED : மார் 08, 2024 09:28 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி முன்னேறியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோ, கிட்டினுபோங் கெட்ரென் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-13 என தன்வசப்படுத்தியது. முடிவில் சாத்விக், சிராக் ஜோடி 21-19, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
சிந்து ஏமாற்றம்
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் சென் யு பெய் மோதினர். முதல் செட்டை 24-22 என போராடி கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 17-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர் 18-21 எனக் கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 32 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 24-22, 17-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

