/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி * ஹாங்காங் பாட்மின்டனில்...
/
அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி * ஹாங்காங் பாட்மின்டனில்...
அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி * ஹாங்காங் பாட்மின்டனில்...
அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி * ஹாங்காங் பாட்மின்டனில்...
ADDED : செப் 12, 2025 10:58 PM

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரிப் ஜுனைதி, ராய் கிங் யாப் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 21-14 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டை 20-22 என போராடி இழந்தது. மூன்றாவது, கடைசி செட்டை இந்திய ஜோடி 21-16 என வசப்படுத்தியது.
64 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-14, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
லக்சயா வெற்றி
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் இளம் வீரர்கள் லக்சயா சென் 24, ('நம்பர்-20'), ஆயுஷ் ஷெட்டி 20, ('நம்பர்-31') பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை லக்சயா 21-16 என கைப்பற்றினார். அடுத்த செட்டை ஆயுஷ் 21-17 என வசப்படுத்தினார். மூன்றாவது, கடைசி செட்டை லக்சயா (21-13) எளிதாக வென்றார்.
முடிவில் லக்சயா 21-16, 17-21, 21-13 என போராடி வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.