ADDED : செப் 09, 2025 08:14 PM

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்குகிறது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 2021, 2024 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன தைபேவின் வாங் சி லின், சியு ஹிசியன் சியா ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-13 என எளிதாக கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 18-21 என இழந்தது. மூன்றாவது, கடைசி செட்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 21-10 என எளிதாக வசப்படுத்தியது.
முடிவில் இந்திய ஜோடி 21-13, 18-21, 21-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
கிரண் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 21-14, 21-13 என மலேசியாவின் செயம் ஜுன் வெய்யை வென்றார். இரண்டாவது போட்டியில் சக வீரர் சங்கர் முத்துசாமியை 21-81, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வென்றார் கிரண். இதையடுத்து கிரண், பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார்.