ADDED : பிப் 06, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீசா ர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். வில்லியனுார் கோபாலன் கடை அம்மா தெருவில் வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென் றனர். போலீசாரை கண்டதும் கத்தியுடன் வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் கோபாலன்கடை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் 25, என்பது தெரியவந்தது. அவர், மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
