sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மூலிகை மருத்துவம் குறித்த பயிலரங்கம்

/

 மூலிகை மருத்துவம் குறித்த பயிலரங்கம்

 மூலிகை மருத்துவம் குறித்த பயிலரங்கம்

 மூலிகை மருத்துவம் குறித்த பயிலரங்கம்


ADDED : மார் 28, 2026 05:17 AM

Google News

ADDED : மார் 28, 2026 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாவரவியல் துறை சார்பில் ரூசா நிதியுதவியுடன் 'மூலிகை மருத்துவம்' குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.

தாவரவியல் துறைத் தலைவர் பிஜய குமார் நாயக் வரவேற்றார். நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி., தாசிலா, பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவத் தாவரங்களின் முக்கியம் குறித்து பேசினார். சித்த மருத்துவர் லோகநாதன் மூலிகை மருத்துவத்தின் வரலாறு மற்றும் ஆயுஷ் குறித்தும், 24 மூலிகைச் செடிகளில் உள்ள மருத்துவப் பயன்களை படங்களுடன் விளக்கினார்.

அன்னை தெரேசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் பிரகாஷ் யோகானந்தம், மூலிகைகளைப் பதப்படுத்தும் முறைகள் மற்றும் கலப்படங்களைக் கண்டறியும் வழிகள் குறித்து விளக்கினார்.

உள்தர மதிப்பீடு ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் அழகையா வாழ்த்தி பேசினர். பேராசிரியர்கள் ஷெகாவத், விக்ராந்த், ஆனந்தி, ஜானகி, ரூசா ஒருங்கிணைப்பாளர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us