sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகளிர் சக்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

மகளிர் சக்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகளிர் சக்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகளிர் சக்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 04, 2024 06:03 AM

Google News

ADDED : மார் 04, 2024 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் மகளிர் சக்தி என்ற தலைப்பில், மகளிருக்கான தன்னுரிமைகளும், பாலினச் சமத்துவமும் குறித்து விழிப்புணர்வு முகாம் திருவள்ளுவர் நகர், சாய்பாபா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

விழாவில், மத்திய மக்கள் தொடர்பகம் துணை இயக்குநர் சிவக்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை கூறியதாவது,இன்று முதல் வரும் 9ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கும் முகாமில், நேற்று பேச்சு போட்டி நடந்தது.

நாளை 5ம் தேதி இந்திய பெண் தலைவர்கள் மற்றும் சாதனையாளர்கள் குறித்து விநாடி வினா போட்டி நடக்கிறது.

நாளை மறுநாள், 6ம் தேதி, விளையாட்டுகள் மற்றும் பிட்னெஸ் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 7ம் தேதி , பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள், 8ம் தேதி, பெண்களின் ஆரோக்கியத்தில் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

9ம் தேதி முகாம் நிறைவு விழா நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us