/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் தேவைக்கு தண்ணீர் கேட்கும் புதுச்சேரி தமிழக அரசு 4.5 டி.எம்.சி., தருமா?
/
குடிநீர் தேவைக்கு தண்ணீர் கேட்கும் புதுச்சேரி தமிழக அரசு 4.5 டி.எம்.சி., தருமா?
குடிநீர் தேவைக்கு தண்ணீர் கேட்கும் புதுச்சேரி தமிழக அரசு 4.5 டி.எம்.சி., தருமா?
குடிநீர் தேவைக்கு தண்ணீர் கேட்கும் புதுச்சேரி தமிழக அரசு 4.5 டி.எம்.சி., தருமா?
ADDED : டிச 27, 2024 07:35 AM
புதுச்சேரி: தமிழக நீர்நிலைகளில் இருந்து 4.5 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் என, தமிழக அரசிடம், புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்துள்ளது.
புதுச்சேரி, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நிலத்தடி நீரை பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால் நிலத்தடி நீரில் அதிகப்படியான டி.டி.எஸ்., உள்ளது. இதனால் நிலத்தடி நீராதாரத்திலிருந்து நதி நீர் ஆதாரத்திற்கு மாற புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு நீர்வளத் துறை அதிகாரியை, புதுச்சேரி பொதுப்பணித் துறை அதிகாரிகள் சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது புதுச்சேரியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க சாத்தனுார் அணையில் இருந்து புதுச்சேரிக்கு குழாய் மூலம் 1.50 டி.எம்.சி., தண்ணீர் உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழகத்தின் மரக்காணம் பகுதியில் உள்ள கழுவேலி ஏரியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இந்த நீரை புதுச்சேரி அரசின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி தென்பெண்ணையாற்றின் கடைமடை பகுதியில் அமைந்துள்ளது. பெண்ணையாற்றின் தண்ணீர் பங்கீட்டிற்காக 1910ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஆங்கிலேய அரசும் பிரெஞ்சு அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் கடைசியில் 2007ல் தமிழக அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையில் புதுப்பிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி விவசாயத் தேவைக்காக ஆண்டுதோறும் ஏழு மாதங்களுக்கு 2,000 கனஅடி வீதம், இரண்டு மாதங்களுக்கு 1,500 கனஅடி வீதம் மொத்தம் 44.70 டி.எம்.சி., நீரை 9 மாத கால இடைவெளியில் தமிழகம் திறந்து விட வேண்டும். இந்த தண்ணீரை நம்பி புதுச்சேரி மாநிலத்தில் 4,776 ஏக்கர் நிலமும், தமிழ்நாட்டில் 1275.11 ஏக்கர் நிலமும் உள்ளன.
ஒப்பந்தத்தின்படி சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து 9 மாதங்களுக்கு தமிழக, புதுச்சேரி ஆயக்கட்டு பகுதிகள் தண்ணீர் பெற வேண்டும்.
ஆனால் புதுச்சேரி பகுதிக்கு 2 மாதம் வரை தான் தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் பருவமழை பெய்யும் நவம்பர், டிசம்பரில் தான் பங்காரு வாய்க்கால் வழியாக சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் பெறுகிறது.
இதன் காரணமாக, தமிழக அரசிடம், புதுச்சேரி அரசு, மாற்று குடிநீர் திட்டங்களை முன் வைத்துள்ளது.

