/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ெஹலிபேட் மைதானத்தில் படையெடுக்கும் தெருநாய்கள் உணவு அளிக்க தடை விதித்து போர்டு வைக்கப்படுமா?
/
ெஹலிபேட் மைதானத்தில் படையெடுக்கும் தெருநாய்கள் உணவு அளிக்க தடை விதித்து போர்டு வைக்கப்படுமா?
ெஹலிபேட் மைதானத்தில் படையெடுக்கும் தெருநாய்கள் உணவு அளிக்க தடை விதித்து போர்டு வைக்கப்படுமா?
ெஹலிபேட் மைதானத்தில் படையெடுக்கும் தெருநாய்கள் உணவு அளிக்க தடை விதித்து போர்டு வைக்கப்படுமா?
ADDED : ஆக 25, 2025 02:35 AM
புதுச்சேரி : சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ெஹலிபேட் மைதானத்தில் தெரு நாய்களுக்கு உணவு வைக்கக் கூடாது என, தடை விதித்து முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானம் கடந்த காலங்களில் இருளில் மூழ்கி கிடக்கும். அது, குடிமகன்களுக்கு வசதியாக இருந்தது. ெஹலிபேட் மைதானத்தில், நள்ளிரவு முழுதும் கூட்டம் கூட்டமாக குடிக்கும் குடிமகன்கள் மதுபாட்டில்களை கண்ட இடங்களில் வீசி செல்கின்றனர்.
காலையில் பார்த்தால் ெஹலிபேட் மைதானத்தில் எங்கு பார்த்தாலும், குப்பைகளும், மதுபாட்டில்களும் தான் சிதறி கிடக்கும். தற்போது, ெஹலிபேட் மைதானத்தில் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் ைஹமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் வருவது இல்லை.
ெஹலிபேட் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வாக்கிங் செல் லும் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக ெஹலிபேட் மைதானத்திற்குள் வாகனங்கள் செல்ல மாலை 6:00 மணி முதல் வரை இரவு 10:00 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசாரும் அறிவிப்பு பலகை வைத்து ள்ளனர்.
இதன் காரணமாக ெஹலிபேட் மைதானத்தில் குறுக்கு நெடுக்குமாக வாகனங்கள் செல்லுவதில்லை. இதனால் ெஹலிபேட் மைதானத்தில் முதியோர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக வாக்கிங் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு, ஏராளமான குழந்தைகளும் விளையாட வருகின்றனர். சின்ன சின்ன மூன்று சக்கர சைக்கிகள் ஓட்டி பழகுகின்றனர். நுாற்றுக்கணக்கான குழந்தைகள் ஸ்கேட்டிங் பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அமைதியான சூழலுக்கு அச்சுறுத்தும் விதமாக, சுற்றுப்புறங்களில் உள்ள தெருநாய்கள் அனைத்தும் ெஹலிபேட் மைதானத்திற்குள் படையெடுத்து வருகின்றன. அவை, மைதானம் முழுவதும் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிக்கின்றன.
ஒன்றையொன்று ஆக் ரோஷமாக கடித்து குதறி சண்டை போடுகின்றன. அப்படியே, வாக்கிங் செல்பவர்களையும், குழந்தைகளையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. இதனால் வாக்கிங் செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். மரண பீதியில் உறைந்துபோய், கையில் கிடைப்பதை தெரு நாய்கள் மீது வீசி எறிந்து உயிர்தப்பிவருகின்றனர்.
ெஹலிபேட் மைதானத்தில் சுற்றி திரியும் நாய்களுக்கு சிலர் வாகனங்களில் வந்து உணவு அளிக்கின்றனர். இதனால் தான் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவு அளிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. எனவே, ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ெஹலிபேட் மைதானத்திலும் தெருநாய்களுக்கு உணவு அளிப்பது சட்டப்படி தவறு.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ெஹலிபேட் மைதானத்தில் தெருநாய்களுக்கு உணவு அளிக்க கூடாது என்ற அறிவிப்பு பலகையை மைதானத்தின் முக்கிய இடங்களில் உழவர்கரை நகராட்சியும், போலீசாரும் வைக்க வேண்டும்.
பொது இடங்களில் தெரு நாய்களுக்கு பிஸ்கெட், உணவு போடுகின்றவர்கள், நாய்கள் மீது உண்மையான கரிசனமும் அக்கறையும் பாசமும் இருந்தால் அவர்களது வீட்டிற்கு அனைத்து நாய்களையும் அழைத்து சென்று மூன்று வேளையும் சாப்பாடு போட்டு வளர்க்கட்டும்.
இதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஏற்கனவே இப்பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களுக்கு சோறு, பிஸ்கட் போட்டு மேலும் தொல்லை கொடுப்பதை ஏற்க முடியாது. இனியும் புதுச்சேரி அரசு இந்த அடாவடி செயலை அனுமதிக்க கூடாது.
ெஹலிபேட் மைதானத்தில் தெரு நாய்களுக்கு உணவு வைக்கக் கூடாது என, தடை விதித்து முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.