/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்... தாராளம்:முதல்வர் அடுத்தடுத்து அறிவிப்பு
/
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்... தாராளம்:முதல்வர் அடுத்தடுத்து அறிவிப்பு
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்... தாராளம்:முதல்வர் அடுத்தடுத்து அறிவிப்பு
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்... தாராளம்:முதல்வர் அடுத்தடுத்து அறிவிப்பு
ADDED : டிச 24, 2025 05:03 AM

புதுச்சேரி: சமூக நலத்துறை சார்பில் நடந்த அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்டநலத்திட்டங்களுக்கான தொகைகளை முதல்வர் ரங்கசாமி உயர்த்தி அறிவித்துள்ளார். சமூக நலத்துறை சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது. அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
இந்த அரசு உங்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு. ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுள்ள எனது அரசு, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. அவர்களின் திறனை வளர்க்க சமூக நலத்துறை மூலமாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுகிறது.
மாற்றுத்திறனாளிகள் உதவி பெற ஊனத் தன்மை 40 சதவீதம் இருந்தாலே போதும் என்று உறுதி செய்தது நமது அரசு. தற்போது 21 ஆயிரத்து 539 மாற்றுத்திறனாளிகள் மாத உதவி பெறுகிறார்கள். அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கி தரப்படுகிறது. கட்டி முடித்த அரசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில், இடஒதுக்கட்டின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்தளத்திலேயே வீடு தரப்படும். இலவச மனைப்பட்டாவும் தரப்படும்.
விளையாட்டில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தாராளமாக நிதி தருகிறோம். அதை வரைமுறைப்படுத்தி சமூகநலத்துறை சார்பில், தர ரூ.25 லட்சம் ஒதுக்கிட வலியுறுத்தியுள்ளேன். பயிற்சி கூடங்கள் அமைக்க மத்திய அமைச்சர் நிதி ஒதுக்குவதாக கூறியுள்ளார். அதன்படி விளையாட்டு திடல் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைத்து தரப்படும்.
கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம். 20க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர்களுக்கு பெட்ரோல் 5 லிட்டர் உயர்த்தி 300 லிட்டராக தரப்படும். ஆந்திரா உட்பட பிற மாநிலங்களில் உதவி தொகை அதிகமாக தருகிறார்கள்' என்றனர். ஆந்திராவில் தரப்படும் விவரத்தை' பெற்று சாத்தியக்கூறு ஆராய்ந்து, அரசு அதையும் செயல்படுத்தும். இந்தியாவில் அதிக நலத்திட்டங்களை புதுச்சேரி தான் செய்கிறது. புதிதாக திட்டங்களையும் செயல்படுத்தவும் தயாராக இருக்கிறோம். மத்திய அரசு தேவையான நிதியை தருகிறது.
மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களின் செலவினங்களை சமாளிக்க மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரத்தை, ரூ.3,500 ஆகவும், ரூ.4,800யை ரூ.5,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோன்று, தற்போது 15 கிலோ அரிசிக்கு கிலோ ரூ. 30 வீதம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதனை கிலோவிற்கு ரூ.40 ஆக உயர்த்தி, 20 கிலோவிற்கான பணம் செலுத்தப்படும்.
பண்டிகை காலத்தில் இலவச துணி தரப்படும், நிதி ரூ.500யை ரூ.750 ஆக உயர்த்தி தரப்படும். இந்த உயர்த்தப்பட்ட தொகை விரைவில் வழங்கப்படும், சந்தேகம் வேண்டாம்' என்றார்.

