/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைகளை திறக்கக் கோரி 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
/
ரேஷன் கடைகளை திறக்கக் கோரி 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
ரேஷன் கடைகளை திறக்கக் கோரி 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
ரேஷன் கடைகளை திறக்கக் கோரி 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 21, 2024 09:04 AM
புதுச்சேரி,: ரேஷன் கடைகளை திறக்கக் கோரி மா.கம்யூ., சார்பில் இரண்டாவது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காத என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து மா.கம்யூ., சார்பில், கொக்கு பார்க்கு அருகில், நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும், சிலிண்டர், பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, , மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்கக் கோரியும், ஊழியர்களுக்கு 50 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.