/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் கல்லுாரியில் கிராமிய நிகழ்ச்சி
/
காமராஜர் கல்லுாரியில் கிராமிய நிகழ்ச்சி
ADDED : மே 07, 2025 12:46 AM

திருபுவுனை: சாகித்திய அகாடமி மற்றும் கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி இணைந்து 'மானுடம் போற்றும் இரு கவிஞர்களின் தாக்கம்' என்ற தலைப்பில் கிராமிய நிகழ்ச்சியை நடத்தின.
கல்லுாரி முதல்வர் கனகவேல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் சரவணன் வரவேற்றார். சாகத்திய அகாடமி பொதுக் குழு உறுப்பினர் பூபதி சிறப்புரையாற்றினார்.
'பாவேந்தரும் பெண்ணுரிமையும்' என்ற தலைப்பில் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த்துறை பேராசிரியர் சுஜாதா, மானுடம் போற்றும் பாவேந்தர் படைப்புகள் என்ற தலைப்பில் வில்லிய னுார் கஸ்துாரிபா கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் விவேகானந்ததாசன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
சிறார் இலக்கியத்தில் தங்கப்பா என்ற தலைப்பில் சமுதாய கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மாலதி, இயற்கை ஆர்வலர் தங்கப்பா என்ற தலைப்பில் காமராஜர் கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியை சவுந்தரவள்ளி ஆகியோர் உரை நிகழ்த்தினர். கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் அன்புசெல்வன் வாழ்த்துரை வழங்கினார்.
ஆலோசனைக்குழு உறுப்பினர் முருகையன் நன்றி கூறினார்.

