/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு விக்னேஷ் கண்ணன் வழங்கினார்
/
வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு விக்னேஷ் கண்ணன் வழங்கினார்
வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு விக்னேஷ் கண்ணன் வழங்கினார்
வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு விக்னேஷ் கண்ணன் வழங்கினார்
ADDED : ஜன 02, 2024 04:51 AM

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பை, முன்னாள் சபாநாயகர் கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன் வழங்கி வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முன்னாள் சபாநாயகர் கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன், ராஜ்பவன் தொகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் நேரில் சென்று பொங்கல் பரிசு வழங்க முடிவு செய்துள்ளார்.
இதன் துவக்கமாக, புத்தாண்டு தினமான நேற்று, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில், விக்னேஷ் கண்ணன் பங்கேற்றார். கண்ணனின் ஆதரவாளர்களும், முக்கிய பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ராஜ்பவன் தொகுதியில் முதல் வீடாக, முன்னாள் எம்.எல்.ஏ., அன்சாரி துரைசாமி இல்லத்துக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பையை விக்னேஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அனைத்து தொகுதிகளில் இருந்தும் வந்திருந்த கண்ணன் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.