/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமி ஹயகிரிவர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
/
லட்சுமி ஹயகிரிவர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
ADDED : அக் 15, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயகிரிவர் பெருமாள் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயகிரிவர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு கடந்த 11, 12 மற்றும் 13ம் தேதிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, தினமும் காலை 10:00 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மழலைகளுக்கான அரிச்சுவடி வித்யாரம்பம் நடந்தது. இதில், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

