வித்யாபவன் பள்ளி ஆண்டு விழா
வித்யாபவன் பள்ளி ஆண்டு விழா
வித்யாபவன் பள்ளி ஆண்டு விழா
வித்யாபவன் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 22, 2026 05:18 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தேங்காய்திட்டு வித்யா பவன் மேனிலைப்பள்ளியில் 16ம் ஆண்டு விழா நடந்தது.
வித்யாபவன் பள்ளி குழுமத்தின் சேர்மன் ராஜசேகரன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக பாஸ்கர் எம்.எல்.ஏ., புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி, வழக்கறிஞர் மேரி அன்ன தயாவதி ஆகியோர் விழாவினை துவக்கி வைத்தனர்.
பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன், பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் முன்னிலை வகித்தனர்.
விழாவில், கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்கப்பரிசினை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.
தொடர்ந்துஎல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை வகுப்பு வாரியாகமுதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கும், நுாறு சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களின் பரத நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களை, பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் பாராட்டினார்.
பள்ளி சேர்மன் ராஜசேகரன் நன்றி கூறினார்.


