தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

 வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

 வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்


ADDED : ஜூன் 22, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 04:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மாலை அன்ன வாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட வரதராஜப் பெருமாள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வரும் 25ம் தேதி கருட சேவை, 27ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

ஏற்பாடுகளை தேவஸ்தான கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர். விழா வரும் ஜூலை 3ம் தேதி வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us