/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முக்கிய இடங்களுக்கு வாஜ்பாய் பெயர்: பா.ஜ.,வினர் முதல்வரிடம் கோரிக்கை
/
முக்கிய இடங்களுக்கு வாஜ்பாய் பெயர்: பா.ஜ.,வினர் முதல்வரிடம் கோரிக்கை
முக்கிய இடங்களுக்கு வாஜ்பாய் பெயர்: பா.ஜ.,வினர் முதல்வரிடம் கோரிக்கை
முக்கிய இடங்களுக்கு வாஜ்பாய் பெயர்: பா.ஜ.,வினர் முதல்வரிடம் கோரிக்கை
ADDED : டிச 31, 2025 04:58 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை வைக்க வேண்டும் என, பா.ஜ., சார்பில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.
புதுச்சேரி பா.ஜ., சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் செல்வம், மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களுக்கு வாஜ்பாய் பெயரை வைக்க கோரி, மனு வழங்கினார்.
முதல்வரிடம் வழங்கிய மனுவில், வாஜ்பாய் நுாற்றாண்டு நினைவாக புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் அவருக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்பட வேண்டும். மேட்டுப்பாளையம் சந்திப்பிற்கு வாஜ்பாய் சதுக்கம் என, பெயரிட வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மேம்பாலத்திற்கும், வழுதாவூர் சாலைக்கும் வாஜ்பாய் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
உப்பளம் தொகுதியில் உள்ள தாவரவியல் பூங்கா, கொக்கு பார்க் முதல் மரப்பாலம் வரை கட்டப்படவுள்ள மேம்பாலம், லாஸ்பேட்டையில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்ட பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

