/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவிலில் பூஜை பொருட்கள் திருடிய இருவர் கைது
/
கோவிலில் பூஜை பொருட்கள் திருடிய இருவர் கைது
ADDED : டிச 27, 2024 05:59 AM

திருக்கனுார்: விநாயம்பட்டில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பூஜை பொருட்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 24ம் தேதி இரவு பூஜை முடிந்து, பூசாரி ராமலிங்கம் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை 6:00 மணிக்கு கோவிலை திறக்க வந்தபோது, கோவிலின் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 3 குத்து விளக்குகள், 4 காமாட்சி அம்மன் விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த கடலுார் மாவட்டம், கொத்தமங்கலம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சேகர், 50; என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர், அங்காள அம்மன் கோவிலை உடைந்து, பூஜை பொருட்களை திருடியதும், அதனை கலித்திரம்பட்டு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பழைய இரும்பு விற்பனை செய்யும் துரைராஜன், 47; என்பவரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சேகர் மற்றும் துரைராஜனை போலீசார் கைது செய்தனர். துரைராஜனிடம் இருந்து கோவிலில் திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

