/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முள்ளோடை மதுக்கடை எதிரே விபத்து சென்டர் மீடியன் அகற்றியதால் விபரீதம்
/
முள்ளோடை மதுக்கடை எதிரே விபத்து சென்டர் மீடியன் அகற்றியதால் விபரீதம்
முள்ளோடை மதுக்கடை எதிரே விபத்து சென்டர் மீடியன் அகற்றியதால் விபரீதம்
முள்ளோடை மதுக்கடை எதிரே விபத்து சென்டர் மீடியன் அகற்றியதால் விபரீதம்
ADDED : நவ 08, 2024 04:53 AM
பாகூர்: முள்ளோடையில் மதுக்கடை எதிரே சாலையை கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மீது, பைக் மோதிய விபத்தில், வாலிபர் படுகாயமடைந்தார்.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரவின்குமார் 23; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு தனது பைக்கில் கன்னியக்கோவில் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முள்ளோடையில் உள்ள தனியார் மதுக்கடைக்கு எதிரே சென்டர் மீடியன் அப்புறப்படுத்தப்பட்ட வழியாக ஷேர் ஆட்டோ ஒன்று திடீரென கிழக்கு பக்க சாலையில் திரும்பி உள்ளது.
பைக்கில் சென்ற பிரவின்குமார், ஆட்டோ மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுக்கடை எதிரே உள்ள பாதையை மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் தினமும் பலர் விபத்தில் சிக்கி வரும் நிலையில், நேற்று மீண்டும் நடந்த விபத்தில் வாலிபர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு, மீண்டும் விபத்து ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

