/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னியக்கோவிலில் திருவிளக்கு பூஜை
/
கன்னியக்கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : அக் 09, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவி லில், திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
இக்கோவிலில், நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான நேற்று இரவு 7.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மாறன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

