/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெருமாள் கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு
/
பெருமாள் கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு
ADDED : டிச 16, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காந்தி வீதி, வரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத உற்சவத்தையொட்டி, இன்று திருப்பாவை சொற்பொழிவுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.
மார்கழி மாத உற்சவ விழாவையொட்டி, கோவிலில், இன்று காலை 5:00 மணிக்கு திருப்பாவை பள்ளி எழுச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து, காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, திருப்பாவை சொற்பொழிவு நடக்கிறது.
தொடர்ந்து, தினமும், திருப்பாவை சொற்பொழிவுயும், வரும் 19ம் தேதி, அனுமன் ஜெயந்தியை யொட்டி, சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, ஏகாதசியை முன்னிட்டு, 20ம் தேதி முதல், பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் செய்து வருகிறார்.

