/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் சட்டசபை நோக்கி பேரணியாக சென்றதால் பரபரப்பு

ADDED : அக் 02, 2024 03:39 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு,சட்டசபை நோக்கி பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் டூவீலர் மற்றும் இ-பைக் ஆகியவற்றை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என, ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையொட்டி, ஆட்டோ தொழிலாளர்கள், நேற்று வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சட்டசபை நோக்கி பேரணியாக, நெல்லித்தோப்பு சிக்னல், சுப்பையா சாலையில் இருந்து புறப்பட்டு, மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றனர்.
மிஷன் வீதியில், பேரணியை போலீசார்தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷம் எழுப்பினர். ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நல வாரியம் அமைத்து, தீபாவளி உதவித்தொகையாக, ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதில் தி.மு.க., காங்., இ.கம்யூ., மா.கம்யூ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தொழிற்சங்கத்தினரும், போராட்டத்தில் பங்கேற்றனர்.