நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் ஆஞ்ச நேயர் கோவிலில் , 21ம் ஆண்டு புரட்டாசி மாதத்தை யொட்டி, தி ருமஞ்சனம் நிகழ்ச்சியில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முருங்கப்பாக்கம், சமரச சன்மார்க்க ராமாநுன்ஜ பஜனை மடத்தில், ஆஞ்ச நேயர் கோவில் உள்ளது.
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு கலசஸ்தாபனம் மற்றும் பஜனை நடக்கிறது. தொடர்ந்து, ஆஞ்ச நேயர் சாமிக்கு திருமஞ்சனம் நடந்தது.
நிகழ்ச்சியில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, கருட வாகனத்தில் திருமால் சுவாமி வீதியுலா வந்து, அருள்பாலித்தார்.