/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டுப்பாட்டை இழந்த பி.ஆர்.டி.சி., பஸ் நிழற்குடை, மின் கம்பத்தில் மோதியது
/
கட்டுப்பாட்டை இழந்த பி.ஆர்.டி.சி., பஸ் நிழற்குடை, மின் கம்பத்தில் மோதியது
கட்டுப்பாட்டை இழந்த பி.ஆர்.டி.சி., பஸ் நிழற்குடை, மின் கம்பத்தில் மோதியது
கட்டுப்பாட்டை இழந்த பி.ஆர்.டி.சி., பஸ் நிழற்குடை, மின் கம்பத்தில் மோதியது
ADDED : மார் 09, 2024 02:45 AM

புதுச்சேரி: கோரிமேட்டில் கட்டுப்பாட்டை இழந்த பி.ஆர்.டி.சி., பஸ் சாலையோர நிழற்குடை மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரியில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று பந்த் போராட்டம் நடந்தது. ஒரு சில பி.ஆர்.டி.சி., பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. நேற்று காலை 10:45 மணிக்கு, பி.ஓய்.01.பி.சி. 0799 என்ற எண்ணுடைய பி.ஆர்.டி.சி., பஸ் கோரிமேடு ஜிப்மரில் இருந்து பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டது. பஸ்சில் 15 பயணிகள் இருந்தனர்.
பஸ்சை டிரைவர் ஆறுமுகம் இயக்கினார்.
கோரிமேட்டில் இருந்து முருகா தியேட்டர் நோக்கி வந்த பஸ் சுப்பையா திருமணம் எதிரில், ஜிப்மர் 7 வது கேட் அருகே வந்தபோது, சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதியது.
அப்போது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஜிப்மர் 7ம் நம்பர் கேட் அருகே உள்ள நிழற்குடை, மின் கம்பம் மீது மோதி நின்றது. பைக்கில் வந்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
பஸ்சில் பயணித்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமுற்றவர்களை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஜிப்மரில்சேர்த்தனர்.
பயணியர் நிழற்குடைக்குள் புகுந்து நின்ற பஸ்சை, கோரிமேடு போலீசார், போக்குவரத்து போலீசார், தீயணைப்பு துறையினர் இணைந்து மீட்டனர்.
இது தொடர்பாக வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

