தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., கையெழுத்து இயக்கம்

காங்., கையெழுத்து இயக்கம்

காங்., கையெழுத்து இயக்கம்


ADDED : செப் 29, 2025 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2025 03:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காங்., சார்பில் ஓட்டு மோசடி செய்த பா.ஜ., ஆட்சியை தெரிந்து கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நாடு முழுதும் ஓட்டு மோசடி செய்த பா.ஜ., மோடி ஆட்சியை துாக்கி எறிய வேண்டும் என, ஆதாரங்களுடன் மக்களிடம் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக ஓட்டு மோசடி பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவும், இந்திய தேர்தல் ஆணையம் 5 கோரிக்கைகளை நிறைவேற்றவும், 5 கோடி கையெழுத்துகள் பெற அனைத்து மாநிலங்களிலும் ஓட்டு திருட்டு விழிப்புணர்வு பிரசார கையெழுத்து பெறும் பணியை துவக்கி உள்ளார்.

புதுச்சேரி காங்., சார்பில், ஓட்டு திருட்டு தொடர்பாக கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது.

நேற்று காமராஜர் நகர் தொகுதி, 45-அடி சாலை பாலாஜி நகர் சந்திப்பு காங்., அலுவலகத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது.

காமராஜர் நகர் தொகுதி பொருப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக முன்னாள் அமைச்சர் கந்த சாமி, இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us