தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் பிரச்னை: கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

கோவில் பிரச்னை: கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

கோவில் பிரச்னை: கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா


ADDED : செப் 30, 2025 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2025 07:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெரிய காலாப்பட்டில் கோவில் பிரச்னையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பிரிவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரிய காலாப்பட்டு செங்கேணியம்மன் கோவில் யாருக்கு சொந்தம் என்பதில் இரு சமூதாயத்திற்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது.

அன்மையில் நடந்த கும்பாபிேஷக விழாவிலும் இது எதிரொலித்தது. இதையடுத்து, இரு சமுதாயத்தினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்த கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இரு தரப்பில் இருந்தும் 10 பேர் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

ஆனால், இரு தரப்பில் இருந்தும் 100க்கும் மேற்பட்டோர், வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

கலெக்டர் குலோத்துங்கன் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் இருந்தும் தலா 10 பேர் மட்டும் அலுவலகத்தின் உள்ளே வரும்படி அறிவுறுத்தினார்.

இதற்கு ஒரு தரப்பினர் தங்கள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறி அலுவலகத்தில் வெளியே திடீர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைகண்ட மற்றொரு தரப்பினரும் அவர்களுக்கு எதிரே அமர்ந்தனர். இதனால், அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, வருவாய்த்துறை தலைமையக சப் கலெக்டர் சிவசங்கரன் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உடன்பாடு ஏற்படாததால மனுவை மட்டும் அளித்து விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us