/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிப்பு
/
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிப்பு
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிப்பு
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிப்பு
ADDED : மார் 12, 2024 05:15 AM

காரைக்கால், : காரைக்கால் மீனவர்கள் 15பேரை விடுவிக்க கோரி மீனவ பஞ்சாயத்தார்கள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
காரைக்கால் மாவட்ட கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த சுதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 6ம் தேதி 15மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை தென்கிழக்கில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் கந்தசாமி, சுந்தரமூர்த்தி, காளிதாஸ், ஆனந்தபால், புலவேந்திரன், ஸ்ரீராம், கவியரசன் மற்றும் தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 15மீனவர்களை கைது செய்தனர்.
மேலும் அவரது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். இதனால் மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள திருமுருகன் தலைமையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்திந்து கோரிக்கை மனு அளித்தனர்.
விரைவில் மத்திய அரசிடம் பேசி மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். உடன் மீனவ பஞ்சாயத்தார்கள் பலர் கலந்துகொண்டனர்.

