ADDED : செப் 22, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : முன்விரோதம் காரணமாக பொறியியல் கல்லுாரி மாணவரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மகன் மணிகண்டன் 19; இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வருகின்றார். இவருக்கும் கோனேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமரன் மகன் அருண் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மணிகண்டன், கூடப்பாக்கம் மந்தவெளி பகுதியில் பைக்கில் சென்றபோது, அங்கிருந்த அருண், மணிகண்டனை ஆபாசமாக திட்டி, தான் வைத்திருந்த கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்.
மணிகண்டன் புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து அருணை தேடி வருகின்றனர்.