/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில்நுட்ப பல்கலை.,யில் சிறப்பு கருத்தரங்கம்

தொழில்நுட்ப பல்கலை.,யில் சிறப்பு கருத்தரங்கம்

தொழில்நுட்ப பல்கலை.,யில் சிறப்பு கருத்தரங்கம்

தொழில்நுட்ப பல்கலை.,யில் சிறப்பு கருத்தரங்கம்

தொழில்நுட்ப பல்கலை.,யில் சிறப்பு கருத்தரங்கம்

ADDED : நவ 15, 2024 04:15 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிறந்த உலகத்திற்கான பகிர்ந்த பார்வை, மாறிவரும் காலநிலைக்கான தரநிலை குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

இந்திய பொறியாளர்கள் கழகம் புதுச்சேரி மையம், தொழில்நுட்ப பல்கலைக்கழக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் உலக தரநிலை தினத்தை முன்னிட்டு, 'சிறந்த உலகத்திற்கான பகிர்ந்த பார்வை, மாறிவரும் காலநிலைக்கான தரநிலை' குறித்த சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் இளஞ்சேரலாதன் வரவேற்றார்.

சென்னை கிளை, இந்திய தரநிலைகள் அலுவலக இணை இயக்குனர் தினேஷ் ராஜகோபாலன் பங்கேற்று, பி.ஐ.எஸ்.யின் பல்வேறு நடவடிக்கைகள், டிரான்ஸ்பார்மர், இண்டக்ஷன் மோட்டார்கள், ஸ்விட்ச்கியர்ஸ் போன்ற முக்கிய மின் சாதனங்களில், இந்திய தரநிலைகள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஆதரவு குறித்து பேசினார்.

இந்திய பொறியாளர்கள் கழகத்தின் மாநில மையத் தலைவர் திருஞானம் சிறப்புரையாற்றினார். உலக தரநிலை தினத்தையொட்டி, பல்வேறு அறிவுசார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இணைப் பேராசிரியர்கள் அஜய் விமல்ராஜ், சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.