ADDED : பிப் 19, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கம்பெனி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புதுச்சேரி சண்முகாபுரம் அண்ணாவீதியைச் சேர்ந்தவர் பிரீத்தி 21, தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

