sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சோலார் நெட் மீட்டர்கள் கிடைப்பதில்... தட்டுப்பாடு; பணம் கட்டியும் விரக்தியுடன் காத்திருப்பு

/

சோலார் நெட் மீட்டர்கள் கிடைப்பதில்... தட்டுப்பாடு; பணம் கட்டியும் விரக்தியுடன் காத்திருப்பு

சோலார் நெட் மீட்டர்கள் கிடைப்பதில்... தட்டுப்பாடு; பணம் கட்டியும் விரக்தியுடன் காத்திருப்பு

சோலார் நெட் மீட்டர்கள் கிடைப்பதில்... தட்டுப்பாடு; பணம் கட்டியும் விரக்தியுடன் காத்திருப்பு


ADDED : ஆக 25, 2025 02:34 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: புதுச்சேரியில் சூரிய ஒளி மின்சாரத்தை கணக்கிடும் நெட் மீட்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு காரணமாக, சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில், ரூ.75,000 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டில் சூரிய ஒளி மின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலமும் இணைந்து, வீடுகளில் சோலார் பேனல் பொருத்த தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தில் இதுவரை, 9.98 கோடி ரூபாய் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. 1,418 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இது ஒருபக்கம் இருந்தாலும் சோலார் பேனல்கள் பொருத்தியவர்கள் பில்லிங்கிற்கான நெட் மீட்டர் கிடைக்கவில்லை என, புலம்பி வருகின்றனர் .

புதுச்சேரியில் தனிப்பட்ட வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், ஏராளமான மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, உரிமையாளர்கள் பயன்படுத்தியது போக உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம்.

இதற்காக, சூரியசக்தி மின் நிலையம் அமைத்துள்ள இணைப்புகளில், பைடைரக் ஷனல் என்ற நெட் மீட்டர் பொருத்தப்படுகிறது.

அந்த மீட்டரில் சூரியசக்தி மின் உற்பத்தி, அதில் உரிமையாளர் பயன்படுத்தியது, மின் வாரியத்திற்கு வழங்கியது, மின் வாரியம் மின்சாரத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட விபரங்கள் பதிவாகும்.

இந்த நெட் மீட்டர்கள் கிடைப்பதில் தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மீட்டர் கொள்முதல் எப்படி தமிழகத்தில் சோலார் பேனல்கள் மானியத்துடன் பொருத்த நினைப்பவர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான நிறுவனத்தின் ஆன்லைனில் 3 பேஸ்க்கு 4,750 ரூபாய், சிங்கிள் பேஸ்க்கு 2,250 ரூபாய் கட்ட வேண்டும். அந்த நிறுவன ஊழியர்களே நேரடியாக வந்து சோலார் மின்உற்பத்தி பில்லிங் மீட்டரான நெட் மீட்டர்களை பொருத்தி விடுகின்றனர்.

ஆனால், புதுச்சேரியை பொருத்தவரை சோலாருக்கு மாற உள்ள மின் நுகர்வோர் தான் நெட் மீட்டர்களை வாங்கி கொடுக்க வேண்டும். மின் நுகர்வோர் வீண் அலைச்சலை கரு த்தில் கொண்டு வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்தும், வென்டர்கள் அதற்கான வேலைகளை முடித்து, நெட் மீ ட்டர்களை வாங்கி மின் துறையிடம் ஒப்படைக்கின்றனர்.

அந்த மீட்டர்களை பெரும் மின் துறை, அதை ஆய்வகத்தில் டெஸ்ட் செய்து, சம்பந்தப்பட்ட மின் துறை இயக்குதல் பராமரிப்பு அலுவலகம் வழியாக வீடுகளில் பொருத்தி விடுகின்றனர். புதுச்சேரியில் ஒரு சோலார் நெட் மீட்டர் பொருத்த 8,500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நெட் மீட்டர்களை வாங்க பணம் கட்டினால் கூட ஒரு வாரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த திடீர் தட்டுப்பாட்டின் காரணமாக வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவதும் ஜவ்வாக இழுக்கிறது.

புதுச்சேரியை பொருத்த வரை சோலாருக்கான நெட் மீட்டர்களை மூன்று நிறுவனங்கள் சப்ளை செய்கின்றன. வென்டர்கள் மூலமாக முன் பணம் கட்டிய பிறகு கூட இந்த நிறுவனங்கள் காலதாமதமாக தான் சப்ளை செய்கின்றன. நெட் மீட்டர்களுக்கு திடீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அப்படி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது எனில், பிற மாநிலங்களில் இருந்து நெட் மீட்டர்களை கொள்முதல் செய்து, புதுச்சேரிக்கு சப்ளை செய்யலாம். சூரிய ஒளி மின்சாரத்திற்கு மாறுபவர்களுக்கு நெட் மீட்டர்கள் தடையின்றியும், தட்டுப்பாட்டு இல்லாமல் கிடைக்க மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போதே மாற்றினால் என்ன..... புதுச்சேரியில் 4 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த அரசு தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் நெட் மீட்டர்கள் போன்றது தான். இந்த மீட்டரிலும் சூரியசக்தி மின் உற்பத்தி, அதில் உரிமையாளர் பயன்படுத்தியது, மின் வாரியத்திற்கு வழங்கியது, மின் வாரியம் மின்சாரத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட விபரங்கள் பதிவாகும். அப்படி இருக்கும்போது 8,500 ரூபாய் செலவழித்து தற்போது அமைக்கப்படும் நெட் மீட்டர்களின் கதி என்ன ஆவது என்றும் சோலாருக்கு மாறுபவர்கள் கேள்வி எழுப்பினர்.

சோலாருக்கு மாறுபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இப்போதே நெட் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டரை பொருத்த நடவடிக்கை எடுத்தால் என்ன. செலவு மிச்சம் தானே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எப்படி அணுகுவது இலவச மின்சார திட்டத்தின் கீழ், மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், மொபைல் எண், இ--மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்தப்படும்.

மானிய விவரங்கள் என்னென்ன? குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோ வாட் முதல் 2 கிலோ வாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம், 3 கிலோ வாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்படும். 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்படும்.

வீட்டிற்கு எவ்வளவு யூனிட் மாத மின் நுகர்வு சராசரியாக 150 யூனிட் வரை இருந்தால், 1 முதல் 2 கிலோ வாட் திறனுள்ள சூரிய சோலார் பேனல்கள் பொருத்தி, ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மானிய உதவி பெறலாம்.

மின் நுகர்வு மாதத்துக்கு சராசரியாக 150 யூனிட் முதல் 300 யூனிட் வரை இருந்தால் 2 கிலோ வாட் முதல் 3 கிலோ வாட் திறனுள்ள சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தி, ரூ.60,000 முதல் ரூ.78,000 வரை மானியம் பெறலாம்.

மாத சராசரி மின் நுகர்வு 300 யூனிட்டுக்கு மேல் உள்ளவர்கள் 3 கிலோ வாட் திறனுக்கு அதிக அளவிலான சோலார் பேனல்களை பொருத்தினாலும் மானிய உச்ச வரம்பு ரூ.78,000 தான்.






      Dinamalar
      Follow us