/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலநிலை மாற்றத்தை கண்காணிக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
/
காலநிலை மாற்றத்தை கண்காணிக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
காலநிலை மாற்றத்தை கண்காணிக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
காலநிலை மாற்றத்தை கண்காணிக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
ADDED : பிப் 05, 2025 05:49 AM
புதுச்சேரி: விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை போர்க்கால அடிப்படையில் கண்காணிக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செல்வகணபதி எம்.பி வலியுறத்தியுள்ளார்.
அவர் ராஜ்சபாவில் இது குறித்து பேசியதாவது:
காலநிலை மாற்றம் விவசாயத்தை பல வழிகளில் பாதித்துள்ளது. மேலும் ஒழுங்கற்ற வானிலையால் மழைப்பொழிவு முற்றிலும் மாறுபட்டுள்ளது. வறண்ட காலங்களும், பெருமழையும் பயிர்களின் வளர்ச்சியை சீர்குலைக்கிறது. அதனால் உணவு உற்பத்தி குறைவதோடு, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. காலநிலை மாற்ற பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய நெல் சேகரிப்பில், 10 அடிக்கு மேல் வளரும் நெல் வகைகள் கிடைக்கின்றன. அதனால் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் வெள்ளத்தைத் தாங்கும் வகையில் கலப்பினமாக்கல் மூலம் அவற்றின் மரபணுத் திறனை மேம்படுத்தி, புதிய அதிக மகசூல் தருவதோடு வெள்ளத்தையும், வறட்சியையும் தாங்கும் வகைகளை அறிமுகப்படுத்தலாம்.
பயிர் வளர்ச்சி முறையை மாற்றிட விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கத்தை போர்க்கால அடிப்படையில் கண்காணிக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

