/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசுடன் கைகோர்க்கிறது மாநில அரசு
/
சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசுடன் கைகோர்க்கிறது மாநில அரசு
சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசுடன் கைகோர்க்கிறது மாநில அரசு
சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசுடன் கைகோர்க்கிறது மாநில அரசு
ADDED : பிப் 09, 2024 05:30 AM

புதுச்சேரியில் உள்ள கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதையடுத்து, புதுச்சேரிக்கு ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அரசுதிட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஐ.டி., பார்மாசூட்டிக்கல் தொழிற்சாலைகளை அதிக அளவில் கொண்டு வர திட்டமிட்டு, பேச்சு வார்த்தைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, புதுச்சேரியில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழில்களை மத்திய அரசு நிதியுதவியுடன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு செய்ய எர்னஸ்ட் யங் நிறுவனம் பிப்டிக் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மாநிலத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்காக முதலீட்டு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இத்திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி, மாநிலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கைகொடுக்க உள்ளது.
குறிப்பாக, நலிந்துள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நிதியுதவி அளித்து, அவர்களுடைய உற்பத்தியை வெளிநாடு, உள்நாடுகளில் சந்தைப்படுத்தும் வழிமுறைகள், காலத்துகேற்ப தொழில்நுட்ப அப்டேட், தொழிலில் லாபம் அதிகரிப்பதற்கான வழிகள், உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தினை அதிகரித்தல் உள்பட 7 வழிமுறைகளுக்கு கைகொடுக்க உள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றொரு நிறுவனத்திற்கு பொருட்களை விற்பனை செய்யும்போது சில நேரங்களில் சரிவர பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை. இதற்கும் கைகொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்முறை மேற்பார்வையின் கீழ் இயங்கும் கவுன்சிலில் முறையிட்டால், பல மடங்கு வட்டியுடன் தொகை செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வளவு நிறுவனங்கள்
மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனம், தொழிற்சாலைகளில் 3,050 கோடிகளில் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
குறிப்பாக, ஓட்டல் உள்ளிட்ட சேவை பிரிவில் மட்டும் 27,207 நிறுவனங்கள் பதிவாகியுள்ளன. உற்பத்தி அளிக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்களை பொருத்தவரை புதுச்சேரி-5511, காரைக்கால்-826, மாகி-109, ஏனாம்-177 என, மொத்தம் 6,623 தொழில் நிறுவனங்கள் உள்ளன. எனவே புதிய செயல்திட்டம் மூலம் இவை, புத்துயிர் பெற உள்ளன.

