தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூரிய மின் திட்டத்தில் ரூ. 3 கோடி மானியம்

சூரிய மின் திட்டத்தில் ரூ. 3 கோடி மானியம்

சூரிய மின் திட்டத்தில் ரூ. 3 கோடி மானியம்


ADDED : ஜன 04, 2025 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2025 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சூரிய மின் உற்பத்தி திட்டத்தில் 3 கோடி ரூபாய் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின் துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மின் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வீட்டு மேற்கூரைகளில் மேல் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க முடியும்.

இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், நாளை 5ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை ரெட்டியார்பாளையம் ஜவகர் நகர், 6-வது குறுக்கு தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடத்துகிறது.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 485 மின்நுகர்வோர் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவி உள்ளனர்.

இவர்களுக்கு 3.04 கோடி ரூபாய் அளவிற்கு இந்த திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். கூடுதல் விபரங்களுக்கு 94890-80373, 94890-80374 மெபைல் எண்கள் மற்றும் ee2ped.py.gov.in என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us