/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி: கொள்ளையர்கள் இருவருக்கு வலை
/
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி: கொள்ளையர்கள் இருவருக்கு வலை
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி: கொள்ளையர்கள் இருவருக்கு வலை
விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் வழிப்பறி: கொள்ளையர்கள் இருவருக்கு வலை
ADDED : பிப் 20, 2024 05:40 AM
புதுச்சத்திரம் : வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற விவசாயியிடம் ரூ.50 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கே.பஞ்சங்குப்பத்தை சேர்ந்தவர் திருமூலம்,70; விவசாயி. வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவரது மகன், விவசாய பணிக்காக புதுச்சத்திரம் கனரா வங்கியில் உள்ள தனது தந்தை வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அனுப்பியிருந்தார்.
அந்த பணத்தை நேற்று திருமூலம் புதுச்சத்திரம் கனரா வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு தங்கள் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்,50; என்பவருடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். மொபட்டை ரமேஷ் ஓட்டினார். திருமூலம் பணப்பையை கையில் வைத்திருந்தார்.
மொபட் பரங்கிப்பேட்டை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, எதிரில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கண் இமைக்கும் நேரத்தில், திருமூலம் கையில் வைத்திருந்த பணப்பையை பிடுங்கிக் கொண்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற விவசாயியிடம் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

