/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்கும் பணி : ஆணையர் ஆய்வு
/
சாலை அமைக்கும் பணி : ஆணையர் ஆய்வு
ADDED : டிச 27, 2025 05:29 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், கொடாத்துார் கிராமத்தில் நடந்து வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை, ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் திருக்கனுார், கொடாத்துார், கூனிச்சம்பட்டு, குமராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியினை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான நமச்சிவாயத்திடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தலின் பேரில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் குமராபாளையம், திருக்கனுார், கொடாத்துார், கூனிச்சம்பட்டு ஆகிய பகுதிகளில் நடந்து வரும் சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை நேற்று ஆய்வு மே ற்கொண்டார்.
ஆய்வின் போது, ஆணையர் எழில்ராஜன், ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என, அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனா, இளநிலை பொறியாளர்கள் ஆனந்தன், மனோகரன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

