ADDED : பிப் 09, 2024 05:38 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் சாலை மேம்படுத்துதல் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், ரூ.14.26 லட்சம் மதிப்பீட்டில் காட்டேரிக்குப்பம் - லிங்காரெட்டிபாளையம் செல்லும் சாலை, திருக்கனுார் ஏரிக்கரை புறவழிச் சாலை அமைக்கும் பணி, கே.ஆர்.பாளையம் வி.ஐ.பி. நகர் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 'ப' வடிவ வாய்க்கால் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் பணிகளை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., நிர்வாகிகள் தமிழ்மணி, கலியபெருமாள், ஜெயக்குமார், ராஜா, சிதம்பரநாதன், நாஞ்சில் மனோகரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுந்தரராஜ், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு பள்ளி யில் தனியார் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் திறந்து வைத்தார்.

