/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீண்ட இழுபறிக்கு பிறகு சாலை - மேல்பேரடிகுப்பம் புறவழிச்சாலை திறப்பு : வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
/
நீண்ட இழுபறிக்கு பிறகு சாலை - மேல்பேரடிகுப்பம் புறவழிச்சாலை திறப்பு : வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
நீண்ட இழுபறிக்கு பிறகு சாலை - மேல்பேரடிகுப்பம் புறவழிச்சாலை திறப்பு : வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
நீண்ட இழுபறிக்கு பிறகு சாலை - மேல்பேரடிகுப்பம் புறவழிச்சாலை திறப்பு : வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 28, 2024 07:27 AM

செஞ்சி : செஞ்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை கொடுத்து வந்த சாலை - மேல்பேரடிகுப்பம் புறவழிச்சாலை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை எண் 77ல், திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான 187 கி.மீ., சாலையை இருவழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2012ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரச்னைகளால், இடையில் மூன்று ஆண்டுகள் பணி முடங்கியது. தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இதில், திருவண்ணாமலை, திண்டிவனம், செஞ்சி, செங்கம், ஊத்தங்கரை, கீழ்பென்னாத்தூர், சிங்காரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புறவழிச்சாலை அமைத்துள்ளனர். அதிக வளைவுகள், குறுகலாக இருந்த கிராமப்பகுதிகளிலும் புதிதாக புறவழிச்சாலை அமைத்துள்ளனர்.
செஞ்சி - திண்டிவனம் இடையே மேல்பேரடிக்குப்பம் - சாலை ஆகிய கிராம பகுதியில் 1.5 கி.மீ., தூரத்திற்கு புறவழிச்சாலை அமைத்து வந்தனர். இங்கு விவசாயி ஒருவர் கூடுதல் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்ததாலும், இதன் குறுக்கே சென்னையில் இருந்து திருச்சி - மதுரைக்கு செல்லும் டீசல் மற்றும் எரிவாவு குழாய்கள் இருந்ததாலும் பணி மந்தமாக நடந்து வந்தது.
தற்போது பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் முதல் இந்த புறவழிச் சாலையில் வாகன போக்குவரத்து துவங்கி உள்ளது.
நேற்று இறுதிக்கட்டமாக, புறவழிச் சாலை முடிவுறும் இரு இடத்திலும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்ய சாலையின் குறுக்கே அதிர்வு ஏற்படுத்தும் வெள்ளை கோடு அமைக்கும் பணி நடந்தது.
கடந்த பல ஆண்டுகளாக மேடு பள்ளம் நிறைந்த குறுகலான சாலையில் மேல்பேரடிகுப்பம் - சாலை வழியாக சென்று வந்த வாகன ஓட்டிகள், புறவழிச் சாலை திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குறுக்கு சாலை
புறவழிச் சாலையின் குறுக்கே மேல்பேரடி குப்பத்தில் பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவின் குறுக்கே புறவழிச்சாலை அமைத்துள்ளனர்.
தெருக்களில் இருந்து வருபவர்கள் புறவழிச் சாலையில் குறுக்கே வருகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, பொன்னியம்மன் தெருவின் இரண்டு பக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

