/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சுதந்திர தினத்தை கீழூரில் கொண்டாட கோரிக்கை
/
புதுச்சேரி சுதந்திர தினத்தை கீழூரில் கொண்டாட கோரிக்கை
புதுச்சேரி சுதந்திர தினத்தை கீழூரில் கொண்டாட கோரிக்கை
புதுச்சேரி சுதந்திர தினத்தை கீழூரில் கொண்டாட கோரிக்கை
ADDED : அக் 12, 2024 05:23 AM
புதுச்சேரி: கீழூரில் புதுச்சேரி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என, மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியின் சுதந்திர தினத்தை நவம்பர் 1ம் தேதி அரசு கொண்டாட உள்ளது. பிரெஞ்சுக்காரர்களிடம் 138 ஆண்டுகள் இருந்த புதுச்சேரி விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்ததைக் குறிக்கும் நாள் தான் நவம்பர் 1.
பிரெஞ்சுக்காரர்கள், புதுச்சேரியை இந்திய அரசோடு இணைக்க வேண்டும் என, முடிவெடுத்தது தான் புதுச்சேரியின் சுதந்திரத்தை முழுமைப்படுத்திய நாள். அதை நடைமுறைபடுத்திய இடம் மங்களம் தொகுதியில் உள்ள கீழூர் கிராமம்.
அங்கு தான் புதுச்சேரியில் இருந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மாநிலப் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து புதுச்சேரி சுதந்திரம் பெற்று இந்தியாவோடு இணைய முடிவு எடுத்தனர்.
எனவே, புதுச்சேரி சுதந்திர தினம் கீழூர் கிராமத்தில் தான் கொண்டாட வேண்டும். இதற்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும். அங்கு முதல்வர் கொடியேற்றி புதுச்சேரி மக்களுக்கு சுதந்திரதினச் செய்தியை வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

