/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
/
மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : டிச 27, 2024 06:21 AM

பாகூர்: மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களுக்கு, கருணை அடிப்படையில், நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கிட வேண்டும் என, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், கூறியதாவது;
புதுச்சேரியில் புயல், கன மழை, வெள்ளத்தால் சுவர் இடிந்த வீட்டிற்கு 10 ஆயிரம், முழுமையாக இடிந்த வீட்டிற்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
எனது தொகுதியில், கிராமங்களில் மண் சுவரால் ஆன குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மழை, வெள்ளத்தால் குடிசை வீடுகளில் மண் சுவர் கரைந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.
இவர்களுக்கு நிவாரணம் வேண்டும் என வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சுவர் விழுந்தால் மட்டுமே நிவாரணம் என்கின்றனர்.
உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்காத சூழல் உள்ளது.
இதனை, எதிர் கட்சியினர் சாதகமாக பயன்படுத்தி, முதல்வருக்கு கெட்டப் பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
உண்மையில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு, முதல்வர், கருணை அடிப்படையில் நிவாரண உதவிகளைவழங்கிட வேண்டும்' என்றார்.

