/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் நியமிக்க கோரிக்கை
/
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் நியமிக்க கோரிக்கை
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் நியமிக்க கோரிக்கை
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் நியமிக்க கோரிக்கை
ADDED : மார் 12, 2024 05:52 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கான தலைவர், உறுப்பினர்களை நியமிக்க சமூக நீதி பேரவை கோரிக்கை வைத்துள்ளது.
பேரவை செயலாளர் கீதநாதன் அறிக்கை:
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் 1966க்கு பிறகு 2001ல் நடந்தது.
பின்னர், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணி நடந்தபோது, எம்.பி .சி., களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என நீதிமன்ற உத்தரவுபடி, எம்.பி.சி கணக்கெடுப்பதற்கான ஒரு நபர்கமிஷன் நீதிபதி சசிதரன் தலைமையில்அமைக்கப்பட்டது. அவருக்கு துணையாக முன்னாள் நீதிபதிராமபத்திரன் நியமிக்கப்பட்டார்.
கமிஷன் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகிய நிலையில், இதுவரை எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. தற்போது, மேலும் பதவி காலத்தை ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதைவிடுத்து, புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை செயல்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கை எடுத்து, தலைவர், உறுப்பினர்நியமனம் செய்ய வேண்டும். அதன் மூலம் எம்.பி.சி., கணக்கெடுப்பு நடத்தி தேர்தல் நடத்த வேண்டும்.

