/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாதானுாரில் நீர்பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
வாதானுாரில் நீர்பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வாதானுாரில் நீர்பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வாதானுாரில் நீர்பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : அக் 25, 2024 06:19 AM

புதுச்சேரி: வாதானுார் இருளர் குடியிருப்பு அருகே இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அதிகாரிகள் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
திருக்கனுார் அடுத்த வாதானுார் ஏரிக்கரை ஓரம் இருளர் குடியிருப்பு மக்களுக்கு அரசு நில அளவைத் துறை மூலமாக இலவச மனைபட்டா வழங்கப்பட்டது. அதன் அருகே செல்லும் நீர்வரத்து பாசன வாய்க்கால் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் அமைந்திருந்தனர்.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், வில்லியனுார் தாசில்தார் சேகர், பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு உதவி பொறியாளர் மதிவாணன், கொம்யூன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் ஊழியர்கள் நேற்று ஆக்கிரமிப்புகளை பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

