/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை
/
ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க பரிந்துரை
ADDED : அக் 09, 2024 04:24 AM
புதுச்சேரி : இரண்டு ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சண்முகாபுரம், சாணரபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், ரவுடிகள் செயல்படுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதனை அடுத்து, பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட, சண்முகாபுரத்தை சேர்ந்த ரவுடி விஜி (எ) காக்கா விஜி, 32; சாணரபேட்டையை சேர்ந்த நடராஜன் (எ) கட்டெறும்பு விஜி, 33; ஆகிய இருவரையும், 3 மாதத்திற்கு ஊருக்குள் நுழைய தடை விதி வேண்டும் என மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

