/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொடர் போராட்டங்களால் ராஜ்நிவாஸ் சாலை மீண்டும் மூடல்
/
தொடர் போராட்டங்களால் ராஜ்நிவாஸ் சாலை மீண்டும் மூடல்
தொடர் போராட்டங்களால் ராஜ்நிவாஸ் சாலை மீண்டும் மூடல்
தொடர் போராட்டங்களால் ராஜ்நிவாஸ் சாலை மீண்டும் மூடல்
ADDED : மார் 10, 2024 06:36 AM

தொடர் போராட்டங்களால் ராஜ்நிவாஸ் சாலை மீண்டும் மூடப்பட்டது. கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசுக்கு அனுப்புவதை எதிர்த்து ராஜ்நிவாஸ் எதிரே கருப்பு சட்டை அணிந்து அப்போதைய முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தினார். அதையடுத்து அச்சாலை 2018 பிப்ரவரி 13ல் இருந்து முழுமையாக மூடப்பட்டது.
ஒருக்கட்டத்தில் மோதல் பெரிதாகி புதுச்சேரியில் நகரப்பகுதிகள் முழுக்க எங்கும் செல்ல முடியாதப்படி தடுப்புகள் அமைக்கப்பட்டன. இச்சூழலில் கிரண்பேடி நீக்கப்பட்டு, பொறுப்பு கவர்னர் தமிழிசை நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன் தடுப்புக்கட்டைகள் நகரப்பகுதியில் அகற்றப்பட்டன. ஆனால், ராஜ்நிவாஸ் செல்லும் சாலையில் இரும்பு தடுப்புகள் நீடித்தன.
கவர்னர் ஊரில் இல்லாதபோதும் இச்சாலையை மூடி வைத்துள்ளனர். பாரதி பூங்காவுக்கு அவ்வழியாக செல்ல மறுக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
தடுப்புகளை அகற்றி மக்களின் பயன்பாட்டுக்கு முதலில் தமிழிசை திறக்க வேண்டும் என, எதிர்கட்சி தலைவர் சிவா குற்றம்சாட்டினார்.
அதையடுத்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் ராஜ்நிவாஸ் செல்லும் சாலையில் தடுப்புகள் அகற்றப்பட்டன. சிறுமி விவகாரத்தில் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
இண்டியா கூட்டணி கட்சியினர் ராஜ்நிவாசின் முன் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் எதிரொலியாக தற்போது மீண்டும் ராஜ்நிவாஸ் சாலையில் தடுப்புகள் போடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

