/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னலில் எல்.இ.டி., எச்சரிக்கை விளக்குகள்
/
ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னலில் எல்.இ.டி., எச்சரிக்கை விளக்குகள்
ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னலில் எல்.இ.டி., எச்சரிக்கை விளக்குகள்
ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னலில் எல்.இ.டி., எச்சரிக்கை விளக்குகள்
ADDED : அக் 12, 2024 02:38 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் சோதனை முறையில் ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னல் ரவுண்டனா சுற்றி அமைக்கப்பட்ட எல்.இ.டி., எச்சரிக்கை விளக்குகள் துவக்கி வைக்கப்பட்டது.
புதுச்சேரியில் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்ற இந்திரா, ராஜிவ் சிக்னலில் உள்ள ரவுண்டானா பெரிய அளவில் உள்ளது. இரவு நேரத்தில் சிக்னல் இயங்காது. அப்போது, அதிவேகமாக வரும் வாகனங்கள், ரவுண்டானாவில் மோதி அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ரவுண்டானா அளவை குறைக்க அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் விபத்துக்களை தடுக்க பொதுப்பணித்துறை சார்பில் ரவுண்டானாவை சுற்றி சோதனை முறையில் (பைலட் திட்டம்) பைபர் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட எல்.இ.டி., கெர்ப் லைட் (தடை விளக்கு) பொருத்தப்பட்டது.
நீளம், வெள்ளை நிறத்தில் எரியும் இந்த விளக்குகள் துாரத்தில் அதிவேகமாக வரும் வாகனங்கள் ரவுண்டானா மீது மோதுவதை தவிர்க்க எச்சரிக்கை செய்யும். இந்த எல்.இ.டி., விளக்குகளை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், விபத்து ஏற்படும் கடலுார் சாலையில் கிருமாம்பாக்கம், விழுப்புரம் சாலையில் அரும்பார்த்தபுரம், ஆரியப்பாளையம் பாலம் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட உள்ளது என, தெரிவித்தனர்.

