/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
30 தொகுதியிலும் தனித்து போட்டி: புதுச்சேரி பா.ம.க., அதிரடி முடிவு
/
30 தொகுதியிலும் தனித்து போட்டி: புதுச்சேரி பா.ம.க., அதிரடி முடிவு
30 தொகுதியிலும் தனித்து போட்டி: புதுச்சேரி பா.ம.க., அதிரடி முடிவு
30 தொகுதியிலும் தனித்து போட்டி: புதுச்சேரி பா.ம.க., அதிரடி முடிவு
ADDED : மார் 17, 2026 04:27 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 தொகுதிகளில் தனித்து போட்டியிட பா.ம.க., (அன்புமணி அணி) முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் நேற்று இரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் வடிவேலு, மதியழகன், கோபி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆலோசனைக்கு பிறகு, நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியுடன் பா.ம.க., போட்டியிட்டாலும், புதுச்சேரியில் உள்ள கூட்டணி தலைவர்கள் தங்களை மதிக்கவில்லை. கூட்டணி கட்சி தலைவரும், முதல்வருமான ரங்கசாமியை கட்சி நிர்வாகிகளுடன் சென்று 4 முறை சந்தித்துள்ளோம். புதுச்சேரியில் 5 இடங்கள் கேட்டோம். ஆனால் கூட்டணி குறித்து அவர் எந்த முடிவும் பேசாமல் எங்களை புறக்கணித்துள்ளார்.
அதே போன்று, பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை 3 முறை சந்தித்து பேசினோம். அவரும் கட்சி மேலிடத்தை கேட்டு சொல்வதாக கூறினார். புதுச்சேரி பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்தோம். அவரும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில், பா.ம.க., ஆதரவோடு, என்.ஆர்.காங்., வெற்றி பெற்றது. ஆனால், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், கூட்டணி தலைமை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
எனவே, புதுச்சேரியில், 30 தொகுதியிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து, அன்புமணிக்கு தெரிவித்து, அவர் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்பது என கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

